கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் கடந்த 11ஆம் தேதி அதிகாலையில் யாரோ மர்ம ஆசாமி ஒருவன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றான்.
அப்போது அலாரம் ஒலித்ததால் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யபட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வங்கியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். .அதில் ஒரு ஆசாமி நடந்து செல்வது தெரியவந்தது.
அவனை பிடிக்க மாநகர குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் உமா உத்தரவின் பேரில் மேற்குப்பகுதி குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்க பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து , ஏட்டுக்கள் உமா, கார்த்திக் ,பூபதி, சித்தன், மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தீவிரமாக அந்த கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் வைத்து ஒரு ஆசாமி சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். .அவனிடம் விசாரணை நடத்தியதில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவன் அவன் தான் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான். அவனது பெயர் அமீஸ்பிஸ்வாஸ் (வயது 28) மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். இந்த ஆசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை பிடித்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா உள்ளிட்ட தனிபடையினரை போலீஸ் கமிஷனர் தீபக். எம் .டமோர் பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்