திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, வெங்கல் காவல் ஆய்வாளர் திருமதி. பத்மஸ்ரீ பாபி அவர்கள் மற்றும் தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின் போது உறவுக்காரரான கார்த்திக் என்பவர் வீட்டில் இருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்து ஆரம்பாக்கத்தில் உள்ள உறவினரான சாந்தி என்பவரிடம் நகையை கொடுத்து தனியார் வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர் என்பது மேற்படி விசாரணையின் மூலம் தெரியவந்தது, இதனையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்