காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாருதி நகர், சங்கரன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் 41. என்பவரது வீட்டிற்குள் கடந்த 23.12.21 அன்று நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி அவர்களிமிருந்து 44 சவரன் நகை, 30 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூ.1,00,000 / ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இதுசம்மந்தமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் 23.12.2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில்,
காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபால் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களின் ( C.C.TV ) பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில்,
1 ) கௌதம் 26. 2 ) சிவக்குமார் 24. மற்றும் 3 ) சந்தானகிருஷ்ணன் 28. ஆகியோர் மேற்படி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்ததையடுத்து மேற்படி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு களவுபோன சுமார் 17,00,000 /– மதிப்புடைய 44 சவரன் தங்கநகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூ .1,00,000 / – ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்