கன்னியாகுமரி : திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத். நகைக்கடை உரிமையாளரான இவரின் காரில் தொழில் சம்மந்தமாக கொண்டு சென்ற 76,40,000/- ரூபாயை நான்கு மர்ம நபர்கள் போலீசார் போல் வேடமிட்டு கொள்ளையடித்து சென்றனர். உடனே சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் தக்கலை உட் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராமச்சந்திரன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சாய் பிரணித் IPS, மற்றும் தக்கலை காவல் ஆய்வாளர் திரு. அருள் பிரகாஷ் ஆகியோர் மேற் பார்வையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. அருளப்பன், திரு. விஜயன், திரு. சுரேஷ் குமார், திரு. சரவணகுமார் ஆகியோர் தலைமையில் நான்கு தனி படைகள் அமைத்தனர்.
தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, CCTV கேமிராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகள் பயன்படுத்திய, காரை கண்டுபிடித்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சஜின் குமார்(37), ராஜேஷ் குமார்(40), சுரேஷ் குமார்(34), மற்றும் கண்ணன்(29) ஆகியோரை பிடித்து விசாரித்த போது சம்பத்தின் நகைக்கடையில் வேலை செய்யும் கோபகுமாரின்(37) ஏற்பாட்டில் திட்டம் தீட்டி கொள்ளையடித்தது தெரியவந்தது.
பின்பு அவர்கள் கொள்ளையடித்த பணம் மீட்கபட்டது. இந்த சம்பவ நடந்த 15 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து, பணத்தை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.