கிருஷ்ணகிரி : தருமபுரி, ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (60). இவர் கடந்த ஜூன் மாதம் ஒசூர் வெங்கடேஷ்வரா லே அவுட் பகுதியில் குடியிருக்கும் தனது உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது டி.எஸ்.பி அலுவலகம் முன்பாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அருகில் வந்து அவரிடமிருந்து 27 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து சரோஜா ஒசூர் மாநகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட பிரபல இராணி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்குர் உத்தரவின் பேரில் ஒசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாத் மேற்பார்வையில் ஒசூர் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளையர்கள் மும்பையில் தங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு முறை சென்று கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திரும்பி வந்த போலீஸார், மூன்றாவது முறையாக மும்பை சென்று இராணி கொள்ளை கும்பலைச் சேர்ந்த சமீர் சபீர் இராணி (27). என்பவரை மும்பை நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி ரயில் கைது. செய்து ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரணைக்கு பின் கொள்ளைப் போன நகைகளை மீட்கவும், பிற குற்றவாளிகளைப் பிடிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதில் மற்றொரு குற்றவாளியை மும்பை போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர். மேலும் இச்சம்பத்தில் தொடர்புடைய ஒருவரைத் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்