சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை காவல் நிலைய சரகம் கண்டனூர் கிராமத்தில் வசிக்கும் திரு தட்சிணாமூர்த்தி வயது 63 மற்றும் அவரது மனைவி திருமதி விசாலாட்சி இவர்கள் வீட்டில் தனியாக இருந்தனர்.
அப்போது அவர்கள் வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு ராமு வயது நாற்பத்தி எட்டு மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர் தட்சிணாமூர்த்தி மற்றும் விசாலாட்சி இவர்கள் தனியாக இருப்பதை பயன்படுத்தி பாக்கியலட்சுமி மற்றும் அவரது தோழி மஞ்சுளா இருவரும் கடன் தொல்லை காரணமாக தட்சிணாமூர்த்தி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்
இதற்கு மஞ்சுளா மகன் அசோக்குமார் 19 என்பவன் மூலம் அவனுடன் படித்த மகேஷ் 20 , பந்தல ராஜன் மற்றும் அஜய் இவர்களை வரவழைத்து கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் அஜய் என்பவன் வெளியாட்கள் நோட்டம் பார்த்துக்கொள்ள அசோக்குமார் பந்தல ராஜன் மற்றும் மகேஷ் வீட்டின் பின் பக்க சுவற்றில் ஏறி உள்ளே குதித்து இவர்கள் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு தயாராக இருந்தபோது.
தட்சிணாமூர்த்தி விசாலாட்சி இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டு சுமார் 45 பவுன் தங்க நகை 34 கேரட் வைரம் மற்றும் 1,75 ,000 பணம் ஆகிய மொத்த பண மதிப்பு 11 லட்சத்து 50 ஆயிரம் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இது சம்பந்தமாக ராமநாதபுரம் சரக காவல் துணை தலைவர் திரு.மயில்வாகனன் ஐ.பி.எஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் படி காரைக்குடி துணை கண்காணிப்பாளர் திரு மேற்பார்வையில் சாக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமதி.அல்லிராணி தலைமையில் தனிப்படை சேர்ந்த சார்பு ஆய்வாளர்கள் திரு. தினேஷ் திரு.பார்த்திபன் திரு.ரஞ்சித் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சக்திவேல் மற்றும் காவலர்கள் குற்றவாளிகளை கண்டு பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி காலை 8 மணி அளவில் சாக்கோட்டை காவல் ஆய்வாளர் மாத்தூர் விளக்கு அருகில் வாகன தணிக்கையின் போது அவ்வழியே வந்த அசோக்குமார் மற்றும் மகேஷ் அவர்கள் மேற்படி சம்பவத்தை பந்தல ராஜன் மற்றும் அஜய் உடன் சேர்ந்து செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அதன்படி வழக்கில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மற்றும் கொள்ளையடித்த பொருட்களை விற்க உதவியாக இருந்த குற்றவாளிகள் பாக்கியலட்சுமி மஞ்சுளா ராமு ஐயங்கரன் பிரபுராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பந்தல ராஜன் மற்றும் அஜய் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து சுமார் 11 லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் மற்றும் பணம் 20,000 கைப்பற்றப்பட்டது குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தனிப்படையினரை ராமநாதபுரம் மாவட்ட காவல் துணை தலைவர் திரு. மயில்வாகனன் ஐ.பி.எஸ் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தக்க தண்டனை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை கொடுத்தனர். மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.