சேலம் : உஜ்ஜிவன் வங்கியின் சூரமங்கலம் கிளை மேலாளர் திரு.M.முரளி, திரு.A.தமிழ்ச்செல்வன் (DSP Retd.) மற்றும் உதவி கிளை மேலாளர்கள் செல்வி.R.ரம்யா, திரு.S.அன்பழகன், திரு.A.விஜயகுமார் ஆகியோர்கள் மாநகர காவல் ஆணையாளர் திருT.செந்தில்குமார்,I.P.S., அவர்களை சந்தித்து 900 முகக் கவசங்கள் மற்றும் 90 சேனிடைசர் பாட்டில்களை சேலம் மாநகர காவல்துறைக்கு வழங்கினார்கள். உடன் காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கதுரை அவர்கள், காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு திரு.N.பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணாரோடு பகுதியில் ஆட்டோவில் வந்த நான்கு நபர்கள் ஆடிட்டர் ரங்கராஜன் வயது 82 என்பவரிடம் கொரோனா நிதி கேட்பதுபோல் வீட்டிற்குள் நுழைந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக வந்த புகாரின் பேரில், தெற்கு சரக காவல் உதவி ஆணையாளர் திருமதி.U.யாஸ்மின் மற்றும் அஸ்தம்பட்டி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை கொண்டு விரைவாக புலன் விசாரணை மேற்கொண்டு 29.06.2020 ஆம் தேதி (1). சேலம் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் வயது 23, (2). சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோயில் மேட்டைச் சேர்ந்த சுகன்ஹாசன் வயது (23), 3. அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற ஊசி கார்த்திக் வயது 23, மற்றும் (4). சேகர் வயது 23 ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து வழிபறிக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் அவர்கள் பறித்துச் சென்ற 4 சவரன் தங்கச் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். வழிப்பறி குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படை போலீசாரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.