தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசியில் கடந்த 07/09/2020 அன்று பகல் 12:30 மணி அளவில் வீட்டு உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி 800 கிராம் தங்க நகை மற்றும் ரூபாய் 50,000 கொள்ளையடித்து சென்ற திருட்டு கும்பலை CCTV, mobile tracking போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சம்பவம் நடந்தததிலிருந்து 33 ஆம் நாள் கொள்ளை கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி மேலும் அனைத்து வழக்குகளிலும் இதுபோல் திறம்பட செயல்பட்டு தென்காசி மாவட்ட காவல்துறைக்கு நற்பெயர் சேர்க்க வேண்டும் என்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்