கோவை: கோவையை அடுத்த காங்கேயம் பாளையத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் ஒரு ஆசாமி உள்ளே எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தான். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது.
உடனே அந்த வங்கியின் மேலாளர் லட்சுமி பிரியா சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அகில் 25 என்பது தெரியவந்தது. அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்