திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையம், அரையூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கின் குற்றவாளி விஜய் , கீழத்தெரு, வெபத்தாங்குடி என்பவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார், அவர்கள் பரிந்துரைன் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் படி (14.01.2023), குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பாக செயல்பட்ட வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் பாராட்டினார்கள்.