ஆரணி: ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ஆனந்தனின் மகன் யோகேஷ்(21).இவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 1-ஆம் தேதி அவரது வீட்டின் அருகே வைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆரணி டவுன் போலீசாருக்கு முள்ளிப்பட்டு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமார்(24), சூர்யா (23), ஸ்ரீதர்(23), மணிகண்டபிரபு(24), நரசிம்மன்(24), கோபி(22), சரத்குமார்(23), வினோதன்(28) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 6 கத்திகளை பறிமுதல் செய்து. போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்