கும்பகோணம்: கும்பகோணம் மேலகாவேரி பகுதியைச் சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி ராமநாதன் செட்டியார் (வயது 65).இவர் மனைவி விஜயாயுடன் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது உள்ளே வந்த மர்ம நபர்கள் ராமநாதனிடம் நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு கொள்ளையர்கள் ராமநாதனை கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
மேலக்காவேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் எண்ணெய் வியாபாரி ராமநாதனை கொலை செய்து நகையும் பணத்தையும் கொள்ளை அடித்தது என்பது தெரியவந்தது
ஆழ்வான்கோவில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டியன், அசூர் சித்தி விநாயகர் தெருவைச் சேர்ந்த வினோத், மேட்டு தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், மற்றும் தஞ்சை மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த ரஞசன், பாலாஜி என்பது தெரியவந்தது. ஆழ்வான்கோவில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டியன், அசூர் சித்தி விநாயகர் தெருவைச் சேர்ந்த வினோத், மேட்டு தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், மற்றும் தஞ்சை மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்த ரஞசன், பாலாஜி என்பது தெரியவந்தது.
மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றவாளிகளான தங்கபாண்டியன், வினோத், ரஞ்சன், பாலாஜி, ஹரிகரன்ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனையும் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் ஜோசப் வழங்கி தீர்ப்பளித்தார்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்