திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் மாரிமுத்து 30. என்பவரும் சமத்துவ புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் உமாசெல்வி என்பவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் உமாசெல்வியின் நகைகளை மாரிமுத்து வீட்டார் கொடுக்காமல் இருந்த முன்பகை காரணமாக, 14.08.2022 அன்று மாரிமுத்துவின் தந்தை சுப்பையா லட்சுமிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டு இருந்த போது அங்கு வந்த சமத்துவபுரத்தை சேர்ந்த உமா செல்வியின் சகோதரர்கள் மற்றும் தந்தையாகிய முத்துகுட்டி 25, சுடலைமணி 26, மாரியப்பன் 51. ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை அவதூறாக பேசி அருவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பாப்பாக்குடி காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.02.2025 இன்று விசாரித்த நீதிபதி திரு. மனோஜ்குமார் அவர்கள் குற்றவாளிகளான முத்துகுட்டி, சுடலைமணி, மாரியப்பன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த பாப்பாக்குடி காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.