இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய சரகம் நரிப்பையூர் அருகே கடந்த 24.12.2018-ம் தேதியன்று எரிந்த நிலையில் ஆண் பிரேதம் ஒன்று கிடப்பதாக சாயல்குடி வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி காவல் நிலைய குற்ற எண்:221/2018 சட்டப்பிரிவு 302, 201 @ 120(b) 364, 201, 302 IPC பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.
அதே சமயத்தில், சாயல்குடி காவல் நிலைய சரகம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை மகன் முத்து என்பவர் காணாமல் போய் விட்டதாக அவரது அண்ணன் அழகுலிங்கம் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி காவல் நிலைய குற்ற எண்:201/2018 u/s Man Missing பிரகாரம் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வந்தது.
மேற்கண்ட இரு வழக்குகளையும் புலன் விசாரணை செய்ததில் காணாமல்போன முத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. முத்துவை கொலை செய்த குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.திருமலை அவர்களின் மேற்பார்வையில், சிக்கல் காவல் ஆய்வாளர் திரு.முருகதாசன், சார்பு ஆய்வாளர் திரு.சரவணன், தலைமைக்காவலர் திரு.தங்கச்சாமி, மற்றும் தீவிர குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.நவநீதகிருஷ்ணன், காவலர்கள் திரு.கருப்புசாமி, திரு.சந்திரசேகர், திரு.பாண்டியராஜன் மற்றும் திரு.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இவ்வழக்கினை மூன்று மாதங்களாக தீவிரமாக துப்பு துலக்கி முத்துவை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் வேதமாணிக்கம், பால் பவுன்ராஜ் மற்றும் ஜோசப் ராஜன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேற்படி வழக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E .கார்த்திக்.IPS., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்