திருநெல்வேலி : நாங்குநேரி காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட தம்புபுரம், பாஸ்கர் தெருவை சேர்ந்த கண்ணன் என்ற நவீன் (21,) என்பவர் மற்றும் முக்கூடல் காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட வடக்கு அரியநாயகிபுரம், வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் பேச்சிகணேஷ் (23), என்பவர் ஆகிய இருவரும் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி, முக்கூடல் காவல் ஆய்வாளர் திருமதி. கோகிலா ஆகியோருக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (20.09.2022), குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.