திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிவலம் பகுதியில் இருதரப்பு பிரச்சனையை விலக்க சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் – 1) மொகமது ஆதாம் (21/25). த/பெ. ஷாகுக் ஹமீது , திருவள்ளுவர் நகர், பாண்டுக்குடி, கூத்தாநல்லூர், 2) ஹாஜி மொகமது (21/25). த/பெ. மொகமது ஹரீஷ், பறையடி, தென்காசி, 3) மொகமது ரசூழுதீன் (21/25). த/பெ. ஜாலாலுதீன், திருவள்ளுவர் நகர், பாண்டுக்குடி, கூத்தாநல்லூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.மேற்படி, நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் * பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி ( 26.07.2025 ) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கஞ்சா, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்