திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் கோபால்சாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி. திரு.சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் டி.எஸ்.பி திரு.முருகன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாலாண்டி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை கைது செய்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த போலீசாரை எஸ்.பி. திரு.சீனிவாசன் பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா