திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமலா நேரு மருத்துவமனை அருகில் உள்ள கடையில் கடந்த 07.08 2021ம் தேதி திண்டுக்கல் எருமைக்காரதெருவை சேர்ந்த மணிகண்டன் (41) என்பவரை மர்ம கும்பல் கொலை செய்தது, இக்கொலை வழக்கில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் 12 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக கொலை வழக்கில் தொடர்புடைய பொண்ணுமாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (39), சத்தியகீர்த்தி (29), அன்பழகன் (22) ஆகிய மூன்று நபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன் இ.ஆ.ப அவர்கள் மூன்று நபர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் மூன்று நபர்களையும் மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா