சேலம் : சேலம் ஊரக உட்கோட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டக்காடு என்ற இடத்தில் நாகராஜன் (31), என்பவர் S.S தாபா என்ற பெயரில் ஹோட்டல் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார் (23/11/2022),-ம் தேதி இரவு சுமார் 11:00 மணி அளவில் தனது தந்தை கந்தசாமி (60) என்பவரை கடை பாதுகாப்பு அலுவலக விட்டுவிட்டு வந்துள்ளார். அதே தாபாவில் வேலை செய்து வரும் காரமடையை சேர்ந்த ஜோசப் என்பவர் இரவு ஒரு மணி அளவில் தாதா உரிமையாளர் நாகராஜன் உறவினர் ராஜாவுக்கு போன் செய்து தாபாவில் யாரோ தகராறு செய்வதாகவும் சென்று பார்க்கும் படியும் கூறியுள்ளார். மேற்படி தாபா கடைக்கி சென்று பார்த்தபோது கந்தசாமி தலையில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்ததாகவும் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி நாகராஜ் என்பவரின் புகார் என்பவரின் புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஊரக உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.தையல்நாயகி அவர்களின் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
மேலும் மோப்பநாய் மேகா உதவியுடன் துப்புத் தொலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் மேல் சென்று அரியானூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று நின்றது உடைஞ்சென்ற காவலர்கள் அந்த இடத்தில் தேடிப் பார்த்தபோது குற்றவாளி ஜோசப் (24) R.P நகர் காரமடை கோயம்புத்தூர் என்பவர் அந்த இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றவரை பிடித்து விசாரித்த போது அவர் கந்தசாமி கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார் அவரது வாக்குமூலத்தில் மேற்படி தாபாவில் இருந்த பழைய ரிப் ரிசிரட்டரில் இருந்த ஒயர் மற்றும் மோட்டாரை கழற்றி விற்பதாக கழற்றிக்கொண்டு இருந்தபோது உள்ளே வந்த கந்தசாமி சத்தம் போட்டதால் அவரைக் கீழே தள்ளி கடப்பாரையால் தலையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. இவ்வழக்கில் மோப்பநாய் மேகா கொலையாளி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற வழியை சரியாக மோப்பம் பிடித்துச் சென்று கொலையாளியை பிடிக்க உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது கொலை சம்பவம் நடைபெற்ற நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று துரிதமாக நடவடிக்கை எடுத்து கொலையாளியை பிடித்த காவல்துறையினர் மற்றும் மோப்பநாய் மேகா ஆகியோரின் நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிநவ், அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்