சென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளனார். தாக்குதலில் காயமடைந்த ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து ராஜனின் உறவினர் டேவிட் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் காயமடைந்த ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் 06.03.2021 அன்று இறந்து விட்டதால் மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளி பாண்டியன் (எ) மாயகிருஷ்ணன், வ/29, மாத்தூர் என்பவரை கைது செய்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
