தென்காசி : தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேக்கரையில் கடந்த (10.07.2022), அன்று பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட முகமது கனி என்பவரின் மகன் முகமது காசிம்(19), என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (30.07.2022),அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திருமதி. வேல்கனி அவர்கள் சமர்பித்தார்..