திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் சரகம்,தமிழ்செல்வன் 50 . கீழதிருப்பாலகுடி என்பவரை முன்பகை காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் உள்ளிக்கோட்டை, பகுதியைச்சேர்ந்த பொய்யாமொழி 45. மற்றும் 08-பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி (POTA) சிறப்பு நீதிமன்றம் வழக்கின் குற்றவாளிகள் இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு கடந்த 30.09.2019 அன்று ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியநிலையில் தற்சமயம் சென்னை புழல் சிறையில் இருந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று 17.09.21மேற்படி குற்றவாளி 1) பொய்யாமொழி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும்ரூ.1,00,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி பொய்யாமொழியை பரவாக்கோட்டை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த பரவாக்கோட்டை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு.சகாயம் செபஸ்திக்கண்ணு