சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம், பகுதியை சேர்ந்த சையத் அப்துல்காதர், வ / 59, என்பவர் கடந்த 01.01.2021 அன்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காம்தார் நகர், 3 வது தெருவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் பொறுப்பு திரு.கிருஷ்ணராஜ், இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் F – 3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1) முருகேசன் ( எ ) முருகன் ( எ ) முஸ்தபா, அமைந்தகரை அவரது தம்பி 2) பழனி, வ / 42, நுங்கம்பாக்கம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் கொலையுண்ட சையத் அப்துல்காதர் கடந்த 31.12.2020 அன்று இரவு மேற்படி 2 நபர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதால் ஆத்திரடைந்த 2 நபர்களும் பீர்பாட்டிலால் குத்தி காயத்தை ஏற்படுத்தியதால் இறந்துள்ளார் என தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 நபர்கள் மீதும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்