திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று அகரமுத்து என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த வழக்கில் அங்குசாமி மற்றும் முத்தழகுபட்டியை சேர்ந்த செல்வம் மகன் ஷியாம்(19) ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் குற்றவாளி அங்குசாமியை அழைத்து சென்ற போது, அப்போது தப்ப ஒட முயன்ற அங்குசாமி தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா