திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலை எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி EB காலனி அருகே கடந்த 22.09.2021 ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கரட்டலகன்பட்டியைச் சேர்ந்த நடராஜன் 49. என்பவர் உட்பட 11 நபர்களை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 11 நபர்களில் கரட்டலகன்பட்டியைச் சேர்ந்த நடராஜன் 49, சீவல்சரகுயைச் சேர்ந்த அய்யனார் 21, பூபாலன் 21, விஜயராஜ் (எ)கருத்தப்பாண்டி 24, நிலக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் 20. மற்றும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 30. ஆகிய 06 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் 06 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா