கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் 30. த/பெ பழனிவேல் என்பவருக்கும் அவரது மனைவி கவிதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது அதானால் கடந்த 14.08.2020-ந் தேதி கவிதாவின் அண்ணன் முருகவேல் 28. த/பெ காத்தவராயன் காட்டுநெமிலி கிராமம் என்பவர் தங்கையின் வீட்டிற்கு சென்று ஞாயம் கேட்டபோது ஏற்பட்ட பிரச்சனையில் தங்கையின் மாமனார் பழனிவேல் 58. த/பெ சுப்பிரமணியன் என்பவரை தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் எடைக்கல் காவல் நிலையத்தில் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை முடித்து குற்றவாளியின் மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 30.01.2023-ந் தேதி விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி செல்வி.பூர்ணிமா அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் முருகவேல் குற்றவாளி என்று உறுதி செய்து 7 ஆண்டு சிறைகாவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் இந்த அபராதம் கட்ட தவறினால் மூன்று மாதம் மேலும் சிறை தண்டனையும் விதித்து தண்டனையாக தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.