சேலம் : சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகம் செட்டிப்பட்டி, கோவிந்தபாடி, கொளத்தூர், மேட்டூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி (56), என்பவரை ஏலச்சீட்டு எடுத்தது சம்பந்தமான பிரச்சனையில் அதே ஊரை சேர்ந்த நந்தகுமார் (24), மகாதேவன் (49), அலமேலு (46), முத்துலட்சுமி (26), ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கொளத்தூர் காவல் நிலையத்தில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், விசாரணையில் இருந்தது.
இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு (12/10/2022), ஆம் தேதி நீதிபதி திரு.குமார் சரவணன், அவர்களால் குற்றவாளி நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும் 12,500 அபராதமும் குற்றவாளி மகாதேவனுக்கு 1500 ரூபாய் அபராதமும் மற்றும் அலமேலு மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு தலா 2500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளி நந்தகுமாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்