சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையார் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, திருவல்லிக்கேணி, ஹரி (எ) அறிவழகன் என்பவர் வசித்து வந்தார். கடந்த 19.09.2019 அன்று இரவு ஹரி வீட்டிலிருந்த போது அங்கு வந்த 3 நபர்கள் கத்தியால் சரமரியாக தாக்கியதில் சம்பவயிடத்திலே இறந்து விட்டார். இது குறித்து ஹரி தாய் லட்சுமி டி-6 அண்ணசதுக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட1.வினோத், வ/29, 2.பாலாஜி, வ/27, 3.சத்யா, வ/29 ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த எழும்பூர் சரக உதவி ஆணையாளர் திரு. சுப்பிரமணி , டி-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.வெங்கட்குமார், டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் தாஸ், டி-2அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருணாச்சலராஜா டி-6 அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிரசித்தீபா, டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மருது, டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கவியரசு, காவலர் ரவிபிரகாஷ் ,(38408) ஆயுதப்படை காவலர் திரு.மதன் (41712) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (27.9.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
செய்தி தொடர்பான மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க