தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி அங்காளஈஸ்வரியை கொலை செய்துவிட்டதை தொடர்ந்து சின்னமனூர் காவல் நிலையத்தில் இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரின் பெயரில் முத்துக்கண்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கு 29.11.2021-ம் தேதியன்று தேனி மாவட்டம், மகிளா விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையின் முடிவில் நீதிபதி திரு.J.வெங்கடேசன்,B.sc,B.L., அவர்கள் சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தக்க சாட்சியங்களின் அடிப்படையில் முத்துக்கண்ணன் என்பவர் குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து சட்டப்பிரிவு 449 IPC-ன் படி 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் , அபராத தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் ,324 IPC-ன் படி 6 மாத சிறை தண்டனையும், 302 IPC-ன் படி ஆயுள் தண்டனையும், 5,000/- ரூபாய் அபராதமும் கட்டத்தவறினால் கூடுதலாக 1 ஆண்டுகள் சிறை தண்டனையும் கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி.L.ராஜேஸ்வரி,B.A,B.L., அவர்களுக்கும், சிறப்பாக புலன் விசாரணை செய்த முன்னாள் சின்னமனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.ஜெயச்சந்திரன் அவர்களுக்கும், விசாரணை சிறப்பாக நடைபெற அனைத்து ஆவணங்களையும் உரிய நேரத்தில் சமர்ப்பித்த தற்போதைய காவல் ஆய்வாளர் திரு.P.சேகர் அவர்களுக்கும், மேலும் இந்த வழக்கில் சாட்சியங்கள் ஆஜர்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நீதிமன்ற தலைமைகாவலர் -1475 திரு.செல்வம் அவர்களுக்கும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.