கள்ளக்குறிச்சி: கடந்த 2020-ம் ஆண்டு ரிஷவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனிவாழை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேல் குடும்பத்திற்கும் வீட்டு மனை பிரச்சனையில் இருந்துவந்தது. இந்நிலையில் 05.10.2020-ந் தேதி சிங்காரவேலின் மகன்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் ராஜசேகர் என்பவர்கள் ஏழுமலை மற்றும் அவரது மகன் வெங்கடேசன் என்பவர்களை கட்டையால் அடித்து, பலமாக தாக்கியதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை இருந்த இருவரில் ஏழுமலை மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் வெங்கடேசனிடன் வாக்குமூலம் பெற்று ரிஷவந்தியம் காவல் நிலையத்தில் குற்ற எண்:-1324/2020-ல் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை முடித்து எதிரி மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 12.01.2023-ந் தேதி விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி செல்வி. பூர்ணிமா அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் ஹரிகிருஷ்ணன் குற்றவாளி என்று உறுதி செய்து ஆயுள் தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதமும் விதித்து தண்டனையாக தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் ராஜசேகர் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.