கள்ளக்குறிச்சி : கடந்த 18.03.2014-ந் தேதி பகண்டை கூட்டு சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரூர் கிராமத்தில் திருவிழா நடந்தபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (31), என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (43), என்பவரை அடித்து, பலமாக தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை முடித்து குற்றவாளி மீது இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் (29.11.2022)-ந் தேதி விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி உயர்திரு. வெங்கடேசன் அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி என்று உறுதி செய்து ஆயுள் தண்டனை மற்றும் 5,000/- ரூபாய் அபராதமும், இதச 324,326 குற்றத்திற்கு தலா இரண்டு வருடம் என மொத்தம் நான்கு வருட சிறை தண்டனை மற்றும் 1,000/- ரூபாய் அபராதமும் விதித்து தண்டனையாக தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பகலவன். இ.கா.ப,. அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.