திருவாரூர்: முத்துப்பேட்டை உட்கோட்டம், களப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவகளப்பால், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் மாரிமுத்து (வயது-54). என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த (09.08.2024) நடுவகளப்பால் கடைவீதியில் படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து களப்பால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து எதிரிகள் தேடப்பட்ட நிலையில் வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் முன்னதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc,(Agri)., அவர்கள் உத்தரவின் படி, முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.ராஜா, முத்துப்பேட்டை, திருக்களார் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுகுற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான, கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நடுவகளப்பால், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கரனின் சகோதரரான ராஜேந்திரன் என்பவரின் மகன் ராகுல் (வயது-24). என்பவரை முத்துப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.ராஜா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள், ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.