திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபருத்தியூர், தோப்பு தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி கண்ணகி (வயது -48). என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, இவ்வழக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருவாரூர் உட்கோட்ட (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கொரடாச்சேரி காவல் ஆய்வாளருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், சம்பவ இடத்தில் விரல் ரேகை பிரிவினர் மற்றும் மோப்ப நாய் படை பிரிவினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.மேற்படி, கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.