திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகோவனூர் மேலத்தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் வெங்கட் பிரசாத் (வயது -28). என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, இவ்வழக்கில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேற்படி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான கூத்தாநல்லூர், வடகோவனூர் மேலத்தெருவை சேர்ந்த 1. கிருஷ்ணசாமி மகன் கஜேந்திரன் (வயது – 58). 2. கஜேந்திரன் மகன் விக்னேஷ் (வயது – 26). ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை கைது செய்த கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.செல்விவெர்ஜினியா, அவர்கள் தலைமையிலான குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொள்ளை, ரௌடிசம், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.