சென்னை: நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் 26 என்பவர் இரவு தனது வீட்டின் முன்பு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த புருஷோத்தமன், முன் விரோதம் காரணமாக தகராறு செய்து இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து ராஜ்குமார், G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்ற குற்றவாளி புருஷோத்தமன் 44, ஓட்டேரி என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி புருஷோத்தமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.