திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ம் ஆண்டு – கார்த்தி @ ராஜ அன்பறிவன் (வயது-37), த.பெ.நாகராஜன், சேர்வமணியம், சித்தமல்லி, நீடமங்கலம் என்பவர் இடப்பிரச்சனை காரணமாக ராஜேந்திரன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை முயற்சி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் படி, கார்த்தி @ ராஜ அன்பறிவன் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவாரூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திருவாரூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின் இன்று (04.01.2025) குற்றவாளிக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கு தொடர்பான நீதிமன்ற அலுவல் பணியை சிறப்பாக செய்த நீதிமன்ற காவலரையும், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.