திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் கொலை முயற்சி பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த தச்சநல்லூர் தேனீர் குளம் கிருஷ்ணா நகரை சேர்ந்த செம்புலிங்கம் மகன் சுரேஷ் (27), என்பவர் மீது என்பவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரியை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் திரு.K.சரவணகுமார், அவர்கள், சந்திப்பு சரக காவல் உதவி ஆணையாளர் திரு.அண்ணாதுரை, அவர்கள், மற்றும் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.வனசுந்தர் அவர்கள், ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.திரு.அவிநாஷ் குமார் இ.கா.ப, அவர்கள் உத்தரவின் படி, மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (02-08-2022) ம் – தேதியன்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்கள்.