சேலம் : தம்மம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமராஜ் (53), என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஆணையப்பன் (69), என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த (26/8/2018) ஆம் தேதி விவசாய நிலத்தில் ராமராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஆணையப்பன் என்பவர் குத்து கோளால் ராமராஜன் மார்பில் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தம்மம்பட்டி காவல் நிலைய குற்ற எண் 162/2018,294(b), 506(ii),307, – ன் படி அப்போதைய காவல் ஆய்வாளர் திரு.விஜயகுமார் அவர்களால், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட இன்று ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்தன் அவர்களால், மேற்கண்ட குற்றவாளி ஆணையப்பன் என்பவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய். 5000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளியை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அரசு வழக்கறிஞர் திரு.சிவகுமார் அவர்கள் வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். மேலும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் இ.கா.ப, அவர்கள் தற்போதைய காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்களை பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்