பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளக்காட்டு நல்லூரைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில் 17.07.2021-ம் தேதி இரவு 08.00 மணியளவில் சிவக்குமார் தனது காட்டில் இருந்த போது.
முருகேசன் மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகிய இரண்டு நபர்களும் சேர்ந்து சிவக்குமாரை அசிங்கமாக திட்டி கத்தியால் வெட்டியது தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட முருகேசன் (60) த/பெ மருதமுத்து மற்றும் சுரேஷ் (35) த/பெ முருகேசன் ஆகிய இருவரையும் மங்களமேடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கலா அவர்கள் இன்று 20.07.2021-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை