தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாப பிள்ளை தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் , (06.08.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதி பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் சுடலைமுத்து (42), தாதன்குளம் பகுதியை சேர்ந்த தளவாய் மகன் முருகன் (25), திருநெல்வேலி திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி (எ) மாயா (19), ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டை வாசல் தெருவை சேர்ந்த பிச்சைபாண்டி மகன் அம்மமுத்து (38) மற்றும் வல்லநாடு மணக்கரை பகுதியை சேர்ந்த தேவபிரான் (எ) மாயா மகன் பார்வதிநாதன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை காவல்துறையினர் , குற்றவாளிகளான சுடலைமுத்து, முருகன், மாயாண்டி (எ) மாயா, அம்மமுத்து மற்றும் பார்வதிநாதன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்றவாளி முருகன் மீது 7 வழக்குகளும், குற்றவாளி சுடலைமுத்து மீது ஒரு வழக்கும், குற்றவாளி மாயாண்டி (எ) மாயா மீது ஒரு வழக்கும், பார்வதிநாதன் மீது முறப்பநாடு மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், குற்றவாளி அம்மமுத்து மீது ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.