திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மானூர், நாஞ்சான்குளம், தெற்ங தெருவை சேர்ந்த ஆல்பர்ட் ஆசீர்வாதம் (78), என்பவர் நாஞ்சான்குளம் கிறிஸ்துவ ஆலயத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஆல்பர்ட் ஆசீர்வாதம் என்பவரிடம் நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் அகஸ்டின் (59), என்பவர் மது அருந்திவிட்டு கிறிஸ்துவ ஆலயத்திற்குள் சென்று தகராறு செய்தது சம்பந்தமாக ஆல்பர்ட் ஆசிர்வாதம் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த முன்விரோதம் காரணமாக நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நின்று கொண்டிருந்த ஆல்பர்ட் ஆசிர்வாதத்தை சாமுவேல் அகஸ்டின் அவதூறாக பேசி அரிவாளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ஆல்பர்ட் ஆசீர்வாதம் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சாமுவேல் அகஸ்டினை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி திரு. மனோஜ்குமார் அவர்கள் குற்றவாளி, சாமுவேல் அகஸ்டினுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.