திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 21, என்பவர் காஞ்சி காமராஜர் நகர் மதுபானக்கடையில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கடலாடி காவல் ஆய்வாளர் திரு.M.முரளிதரன் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட 2 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்