திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் சரக பகுதியில் புவனேஸ்வரி என்ற பெண்ணை முன்விரோதம் காரணமாககொலை செய்யும் முயற்சியில்ஈடுபட்ட சங்கர் (எ) மதிவாணன் 35/22, த.பெ.முனியப்பன்,மேலக்காடு, ஜாம்புவானோடை, முத்துப்பேட்டை என்பவரைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் எதிரி சங்கர் (எ) மதிவாணன்
இன்று (23.01.22) குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த
முத்துப்பேட்டை உட்கோட்டதுணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளதுரை
முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ஜெயகுமார் மற்றும் காவலர்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா