சென்னை: சென்னை காட்டூர், பகுதியைச் சேர்ந்த அச்சுதன், 38, செங்குன்றம், காமராஜர் நகரில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். அச்சுதன் 04.09.2021 அன்று நகை பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு, பொத்தூர், சுடுகாடு அருகில் சென்று கொண்டிருந்தபோது,
2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 நபர்கள் அச்சுதனனை வழிமறித்து கத்தியால் தாக்கினர். இரத்தக் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அச்சுதன் கொடுத்த புகார் மீது M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
M-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் தீவிர விசாரணையில், தொழில் போட்டி காரணமாக அச்சுதனின் முன்னாள் முதலாளி மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், குற்றவாளிகள் 1.ஜெயபாபு, 36, கொளத்தூர், 2.அஜய், 22, செங்குன்றம், 3.பிரதீப் (எ) அப்பு, 28, செங்குன்றம், 4.வீரமணி (எ) மணி, 33, வடகரை, 5.விமல்ராஜ், 27, வடகரை, ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பணம் ரூ.6,50,000/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
