திருநெல்வேலி: கீழ் உப்பூரணி, தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணி துரைராஜ் (39) என்பவரையும் அவருடைய தாயையும் கீழ உப்பூரணி, மேலத்தெருவை சேர்ந்த ஜான்சன் (40), பவுல் (70) ஆகிய இருவர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அருவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அந்தோணி துரைராஜ் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பத்தமடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்(31.07.2023) – ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. விஜயகுமார் அவர்கள், குற்றவாளிகளான ஜான்சன், பவுல் ஆகிய இருவருக்கும் 6 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 51 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த பத்தமடை காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன் அவர்கள், வெகுவாக பாராட்டினார்.