தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் கல்விளை சாலையில் உள்ள ஒரு சலவை கடையில் மன்னார்புரம் சவேரியார்புரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பிச்சை 55. என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை சரியாக வேலைக்கு செல்லாததால் அவருக்கு பதிலாக தூத்துக்குடி மேல கூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த சுயம்பு மகன் துரை 60. என்பவர் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.
இதனால் பிச்சை என்பவருக்கும், துரை என்பவருக்கும் இடையே நேற்று மெஞ்ஞானபுரம் கல்விளை சாலையில் உள்ள மேற்படி சலவை கடை முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிச்சை, துரையிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து துரை அளித்த புகார் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பவுலோஸ் வழக்குபதிவு செய்து குற்றவாளி பிச்சையை கைது செய்தார்.