தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தைக்கா தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் ரஹ்மத்துல்லா 55. என்பவரை முன் விரோதம் காரணமாக கடந்த 26.10.2012 அன்று பீர்பாட்டிலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் வடக்கு ஆத்தூர் மேலதெருவை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் மகன் ஹமீது 55. என்பவரை ஆத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் புலன் விசாரணை செய்து கடந்த 12.11.2012 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. வர்சித்குமார் அவர்கள் இன்று 22.12.2022 குற்றவாளியான ஹமீது என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. பாரிக்கண்ணன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் திருமதி. பொன்முத்துமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.