தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார், மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் (19.10.2022), ரோந்து பணியில் ஈடுபட்ட போது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்ஸார் பெயின்ட் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை விசாரணை செய்யும் போது அவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை வைத்து சுட பார்த்தும், மற்றொருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டும் போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
உடனடியாக மேற்படி போலீசார் அவர்களை பிடித்து விசாரனை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவுன் மகன் ஜான்சன் (44), மற்றும் எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (45), ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் உடனடியாக குற்றவாளிகள் ஜான்சன் மற்றும் முனியசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு கை துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஜான்சன் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், ஆறுமுகநேரி மற்றும் கோவில்பட்டி மேற்கு ஆகிய காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள் உட்பட 24 வழக்குகளும், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், குற்றவாளி முனியசாமி மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர் மற்றும் ஆறுமுகநேரி ஆகிய காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள் உட்பட 9 வழக்குகளும் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி மாநகரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில், ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.