தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி மேலமந்தை கிழக்கு தெருவை சேர்ந்த முத்துவேல் என்பவரது மகன்களான மகேஷ் 23. மற்றும் சுரேஷ் 22. ஆகிய 2 பேரும் நேற்று 24.10.2022 மேலமந்தை காலனி தெருவில் உள்ள ஒரு பாலம் அருகில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சூரங்குடி மேலமந்தை கிழக்கு தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் ராஜ பெருமாள் 26. என்பவர் அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது மேற்படி சுரேஷ் என்பவர் ராஜ பெருமாளை கிண்டல் செய்துள்ளார்.
இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜ பெருமாள் மேற்படி மகேஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகிய இருவரையும் வாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்படி மகேஷ் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. இளவரசு வழக்குபதிவு செய்து மேற்படி குற்றவாளி ராஜ பெருமாளை கைது செய்தார்.