தூத்துக்குடி : தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கோமதி தயாளன் (48), என்பவரும் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம பாண்டியன் மகன் மோகன் (எ) மோகன்ராஜ் (39) ,ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த (30.09.2022) அன்று மது அருந்திக்கொண்டிருந்தபோது மேற்படி இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மோகன் (எ) மோகன்ராஜ் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வைத்து கோமதி தயாளனை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து கோமதி தயாளன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரபி சுஜின் ஜோஸ், வழக்கு பதிவு செய்து எதிரி மோகன் (எ) மோகன்ராஜை கைது செய்தார். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி மோகன் (எ) மோகன்ராஜ் என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், தாளமுத்துநகர், மத்தியபாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள், 9 கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 32 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.